வாங்கிய வீட்டிற்கு பணம் தராமல் ஏமாற்றியவர் கைது
நீலாங்கரை, பெரம்பூர், ராஜவேலு தெருவை சேர்ந்தவர் ஹேமாமாலினி, 56. காரப்பாக்கம், தென்றல் நகரில் உள்ள இவரது வீட்டை, நண்பர் வாயிலாக அறிமுகமான அயனாவரம், வி.பி., காலனியை சேர்ந்த சுபாஷ்சந்த் ஜெயின், 64, என்பவரிடம், அடமானம் வைத்து, 50 லட்சம் ரூபாய் பெற்றார். மேற்கொண்டு பணம் தேவைக்கு, வீட்டை விற்க முடிவு செய்த போது, சுபாஷ்சந்த் ஜெயின் தானே வாங்கி கொள்வதாக கூறினார்.வீட்டிற்கு, 1.60 கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்து, ஏற்கனவே வாங்கிய கடன் மற்றும் வட்டி போக, 97 லட்சம் ரூபாய் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.கடந்த ஆண்டு, நீலாங்கரை சார் - பதிவாளர் அலுவலகத்தில், சுபாஷ்சந்த் ஜெயினின் மனைவி பெயரில், ஹேமாமாலினி கிரையம் செய்து கொடுத்தார்.ஆனால், 97 லட்சம் ரூபாயை கொடுக்காமல், சுபாஷ்சந்த் ஜெயின் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து, நீலாங்கரை போலீசில் ஹேமாமாலினி புகார் அளித்தார்.நேற்று, சுபாஷ்சந்த் ஜெயினை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கனவே, இவர் மீது கந்துவட்டி தொடர்பாக, ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.