உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருடிய பைக்கை பிரித்து பதுக்கியவர் சிக்கினார்

திருடிய பைக்கை பிரித்து பதுக்கியவர் சிக்கினார்

மதுரவாயல்: பைக்கை திருடி, அதன் உதிரிபாகங்களை தனித்தனியாக பிரித்து பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர். மதுரவாயல், எம்.எம்.டி.ஏ., முதல் பிரதான சாலையைச் சேர்ந்தவர் நிகேஷ்வாசன், 28; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த செப்., 15ம் தேதி, எம்.எம்.டி.ஏ., காலனியில் இருந்து உடையாளர்பாளையம் நகருக்கு குடிபெயர்ந்தார். அப்போது, பழுதடைந்த தன் 'யமஹா எப்இசட்' பைக்கை, பழைய வீட்டின் அருகே நிறுத்தி சென்றார். கடந்த 4ம் தேதி வந்து பார்த்தபோது, பைக் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்த புகாரையடுத்து, மதுரவாயல் போலீசார் விசாரித்தனர். இதில், பைக்கை திருடியது, சின்ன நொளம்பூரைச் சேர்ந்த எட்வின், 28, என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில், திருடிய பைக்கின் உதிரிபாகங்களை, தனித்தனியாக பிரித்து எட்வின் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பைக்கின் உதிரிபாகங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை