உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டாக்டர் சீட் வாங்கி தருவதாக ரூ.85 லட்சம் சுருட்டியவர் கைது

டாக்டர் சீட் வாங்கி தருவதாக ரூ.85 லட்சம் சுருட்டியவர் கைது

ஆவடி, மாங்காடு, மதனந்தபுரத்தைச் சேர்ந்தவர் கவுசல்யா, 51. கடந்த 22ம் தேதி, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் மனு அளித்தார். அதன் விபரம்:என் கணவர் சுப்ரமணியனின் நண்பர் கோவிந்தராஜ், நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு பாடநுால் கழகத்தில் பணிபுரிகிறார். கல்வித்துறையில் அதிகாரிகள் மற்றும்அமைச்சர்களை நன்கு தெரியும் என, கோவிந்தராஜன் கூறினார்.அதை நம்பி, என் கணவரின் மற்றொரு நண்பர் சாதிக் மகள் ஆயிஷா பயில்வதற்காக, எம்.பி.பி.எஸ்., சீட் வாங்கி தரும்படி 15 லட்சம் ரூபாய் கோவிந்தராஜிடம் கொடுத்தேன்.மேலும், ஆயிஷாவின் நண்பர்களான ஐந்து பேரிடம் பணம் வசூலித்து, மொத்தம் 85.44 லட்சம் ரூபாயை கோவிந்தராஜ் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன். கோவிந்தராஜ், டாக்டர் சீட் வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இதுகுறித்து விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், தலைமறைவாக இருந்த கடலுார், பள்ளிப்படையைச் சேர்ந்த கோவிந்தராஜை, 42, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ