கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தோர் கைது
காசிமேடு,காசிமேடில், மீனவரை கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறித்த இருவரை, போலீசார் கைது செய்தனர். காசிமேடைச் சேர்ந்தவர் வல்லரசு, 28; மீனவர். இவர், நேற்று காலை பணி முடிந்து, சிங்கார வேலர் நகர் வழியாக, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, இரு மர்ம நபர்கள் வல்லரசை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, 450 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்து, காசிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதன்படி, காசிமேடு, சிங்கார வேலர் நகரைச் சேர்ந்த செந்தில் என்ற 'சைக்கோ' செந்தில், 40, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த எபி, 24, ஆகிய இருவரை கைது செய்தனர்.