மேலும் செய்திகள்
பெண் போலீசின் கழுத்தை அறுத்த மாஞ்சா: ஒருவர் கைது
23-Jan-2025
அமைந்தகரை: புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் ரம்யா, 26. இவர், அமைந்தகரை காவல் நிலையத்தில் பணிபுரிகிறார். கடந்த 19ம் தேதி, நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக, இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, கழுத்தில் மாஞ்சா நுால் சிக்கி காயமடைந்தார்.இது குறித்து, அமைந்தகரை போலீசார் விசாரித்து, அமைந்தகரையில் மாஞ்சா நுால் தயாரித்து விற்கும், பி.பி., கார்டனைச் சேர்ந்த பஞ்சாட்சரம், 42, என்பவரை கடந்த 22ம் தேதி கைது செய்தனர்.சம்பவதன்று காற்றாடி பறக்கவிட்ட, அமைந்தகரையைச் சேர்ந்த குள்ள பரத், 23, என்பவர் நேற்று போலீசில் சிக்கினார்.
23-Jan-2025