உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

திருமங்கலம், சிறுமியை காதலிப்பதாக கூறி, ஈரோடு அழைத்து சென்று தாலி கட்டிய வாலிபர், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். திருமங்கலம் சரகத்துக்குட்பட்ட பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமி, இரண்டு நாட்களுக்கு முன், நண்பர்கள் வீட்டிற்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி சென்றார். இரவு வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர், ஜெ.ஜெ.நகர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், காதலித்து வந்த வாலிபருடன் சிறுமி சென்றது தெரிய வந்ததால், இந்த வழக்கு, திருமங்கலம் மகளிர் போலீசாருக்கு மாற்றப்பட்டது. போலீசார் விசாரித்தபோது, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் சிறுமி இருப்பது, மொபைல்போன் டவர் வாயிலாக தெரிய வந்தது. போலீசார் ஈரோடு சென்று சிறுமியை மீட்டனர். அவரு டன் இருந்த வாலிபரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். விசாரணையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளியான ஆனந்த்குமார், 22, சிறுமிக்கு, ஈரோடில் உள்ள கோவிலில் வைத்து தாலி கட்டியது தெரிய வந்தது. இதையடுத்து, போக்சோ வழக்கில் ஆனந்த் குமாரை, போலீசார் கைது செய்தனர். கைதான அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ