மின் ஊழியராக நடித்து 13 சவரன் திருடியவர் கைது
திருவல்லிக்கேணி, திருவல்லிக்கேணி, டாக்டர் பெசன்ட் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயம், 80. கடந்த 14ம் தேதி மதியம், மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தபோது, மின் வாரிய ஊழியர் எனக்கூறி ஒருவர் வந்துள்ளார்.மின் பயன்பாடு குறித்து கணக்கெடுப்பதாக கூறி நடித்துள்ளார். இதையறியாத மூதாட்டி, வீட்டில் அவரை அனுமதித்துள்ளார். இந்த நிலையில், பீரோவில் இருந்த 15 சவரன் நகைகள் திருட்டு போயிருந்தன. இது குறித்து, ஐஸ் ஹவுஸ் போலீசார் விசாரித்தனர்.இதில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன், 35, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், 13 சவரன் நகைகள், 46,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.கடந்த ஜன., 9ம் தேதி, இதேபோல மவுலிவாக்கம் சுபஸ்ரீ நகரில் உள்ள ஒருவரது வீட்டில் நுழைந்து, 60,000 ரூபாய் திருடியதும் தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.