சொந்த வீட்டில் திருடியவர் கைது
விருகம்பாக்கம்:விருகம்பாக்கம், ராஜாஜி காலனி, முத்துராமலிங்க தேவர் தெருவைச் சேர்ந்தவர் சரவணகுமார், 48. இவரது மனைவி செல்வி, 45; இருவரும் சாலையோரத்தில் தள்ளுவண்டியில் உணவகம் நடத்தி வருகின்றனர்.கடந்த 8ம் வியாபாரம் முடிந்து வீட்டிற்கு சென்றபோது, பீரோ திறக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 30,000 ரூபாய் திருடு போனது தெரிய வந்தது.இது குறித்த புகாரையடுத்து, விருகம்பாக்கம் போலீசார் விசாரித்தனர். இதில், திருட்டில் ஈடுபட்டது அவர்களது மகன் கண்ணன், 21, என தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த கண்ணனை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், கண்ணனின் நடவடிக்கை சரியில்லாத நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.சம்பவத்தன்று வீட்டின் பின்பக்க கதவு வழியாக உள்ளே நுழைந்து, பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது.இவர் மீது, பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.