உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதியவரிடம் ஐ-போன் திருடியவர் கைது

முதியவரிடம் ஐ-போன் திருடியவர் கைது

சென்னை, அரசு மாநகரப் பேருந்தில் முதியவரிடம் ஐ-போன் திருடியவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.நுங்கம்பாக்கம், வி.ஜி.எம்., தெருவை சேர்ந்தவர் பாலராஜ், 70. ஓய்வு பெற்ற மத்தியஅரசு ஊழியர். நேற்று முன்தினம் காலை, ஜெமினி நிறுத்தத்தில் இருந்து, வழித்தடம்: 29 சி பேருந்தில் ஏறினார். சவேரா ஹோட்டல் அருகே பேருந்து சென்றபோது, அவரது கைப்பையிலிருந்த, விலை உயர்ந்த ஐ - போன் மொபைல் போனை, மர்மநபர் திருடிக் கொண்டு தப்பினார். ராயப்பேட்டை காவல் நிலையத்தில், பாலராஜ் புகார் அளித்தார். விசாரணையில், மதுரவாயல் தனலட்சுமி நகரை சேர்ந்த குப்பன், 39, என்பவர், மொபைல் போன் திருடியது தெரியவந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை