பொது தலையில் வெட்டு விழுந்தவர் பலி
எண்ணுார்:எர்ணாவூர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் எட்வின், 36; தனியார் நிறுவன ஊழியர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய், 25. சில தினங்களுக்கு முன், சஞ்சயின் குடும்பத்தை பற்றி, எட்வின் அவதுாறாக பேசியுள்ளார். இதனால் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த 13ம் தேதி இரவு, வீட்டருகே நின்றிருந்த எட்வினின் தலையில், அரிவாளால் சஞ்சய் வெட்டியுள்ளார். பலத்த காயமடைந்த எட்வின், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.எண்ணுார் போலீசார் சஞ்சையை கைது செய்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் நேற்று மதியம் எட்வின் உயிரிழந்தார்.இதையடுத்து, கொலை வழக்காக மாற்றி போலீசார் பதிவு செய்தனர்.