உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாடியில் இருந்து விழுந்தவர் பலி

மாடியில் இருந்து விழுந்தவர் பலி

புளியந்தோப்பு,புளியந்தோப்பு, கே.பி.பார்க் குடியிருப்பின் முதல் மாடியில் வசித்தவர் அஜித்குமார், 28. இவரது தந்தை தேசிங்கு. அஜித்குமாருக்கு மனநிலை சரியில்லை எனக்கூறப்படுகிறது. நேற்று மாலை 5:00 மணியளவில் குடியிருப்பின் முதல் மாடியில் இருந்து அஜித்குமார், கீழே விழுந்துள்ளார். இதில் தலை, கழுத்து உள்ளிட்ட பகுதியில் காயமடைந்தவரை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அஜித்குமாரின் தாய் மகாதேவி, பேசின்பாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், 'என் மகனை அக்கம்பக்கத்தினர் கேலி, கிண்டல் செய்து வந்துள்ளனர். அவன் தவறி கீழே விழ வாய்ப்பில்லை. யாரோ தள்ளி விட்டுள்ளனர்' எனக்கூறியுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை