தனக்கு தானே பிளேடால் கழுத்தறுத்த நபர் இறப்பு
சென்னை: ஐஸ்ஹவுஸ், டாக்டர் பெசன்ட் சாலையில் நடைபாதையில் வசிப்பவர் சண்முகம், 52. சில மாதங்களாகவே, காசநோயால் பாதிக்கப்பட்டு, சிரமப்பட்டு வந்தார். இதில் மனமுடைந்த அவர், 23ம் தேதி மதியம், தனக்கு தானே பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டார். அப்பகுதிமக்கள் அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, சிகிச்சை பலனின்றி, நேற்று மதியம் உயிரிழந்தார். ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.