தகராறில் காயமடைந்தவர் பலி ஓட்டேரியில் 2 வாலிபர்கள் கைது
ஓட்டேரி, ஓட்டேரி, மங்களபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 28. இவர், கடந்த 21ம் தேதி, நண்பர்கள் ஜெய்சங்கர், 26, மற்றும் ஐசக் ஜெயகுமார், 32, ஆகியோருடன் மது அருந்தினார்.அப்போது, நண்பர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஐசக், ஜெய்சங்கர் ஆகியோர், இரும்பு ராடால் மணிகண்டனை தாக்கியுள்ளனர்.தடுக்க வந்த மணிகண்டனின் தம்பி விக்னேஷ்குமாரையும் தாக்கி விட்டு தப்பினர். இதில், பலத்த காயமடைந்த மணிகண்டன், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கி, சிகிச்சை பெற்று வந்தார்.தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால், அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெய்சங்கர் மற்றும் ஐசக் ஜெயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன், நேற்று முன்தினம் இரவு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதையடுத்து, கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.