உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரம்மியில் பணம் இழந்தவர்ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு

ரம்மியில் பணம் இழந்தவர்ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு

திருவள்ளூர்,திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட வயலாநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன், 25. சுங்குவார்சத்திரத்தில், உறவினர் வீட்டில் தங்கி ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணிபுரிந்தார்.'ஆன்லைன் ரம்மி' விளையாடி வந்த தமிழ்செல்வன், 10 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்து உள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தமிழ்செல்வன், கடந்த 3ம் தேதி இரவு 10:00 மணியளவில், திருவள்ளூர் - ஏகாட்டூர் ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில், விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். திருவள்ளூர் ரயில்வே போலீசார் உடலைக் கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ