7 வயது சிறுமியிடம் அத்துமீறிய ஏனாத்துார் நபருக்கு ஆயுள்
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, 7 வயது சிறுமி, 2019 ஏப்., 25ம் தேதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துாரைச் சேர்ந்த முருகன், 39, என்பவர், தன் வீட்டிற்கு சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.பெற்றோர் அளித்த புகாரில், காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, முருகனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கின் விசாரணை, செங்கல்பட்டு 'போக்சோ' நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடந்தது. விசாரணை முடிந்து, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், முருகனுக்கு ஆயுள் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து முருகன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.