மேலும் செய்திகள்
மின்னணு ஓட்டு பதிவு; இயந்திரங்கள் ஆய்வு
13-Oct-2025
பல்லாவரம்: பல்லாவரம் அருகே, அனகாபுத்துார் சர்வீஸ் சாலையில், வாகனங்கள் மற்றும் இயந்திரங்களுக்கு பயன்படுத்தும் ஆயிலை பரிசோதனை செய்யும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில், நேற்று முன்தினம் ஆட்கள் இல்லாத நேரத்தில் உள்ளே சென்ற மர்ம நபர், நான்கு 'ஏசி' இயந்திரங்களில் பொருத்தப்பட்டிருந்த, 70,000 ரூபாய் மதிப்புடைய காப்பர் ஒயர்களை அறுத்து திருடி சென்றார். இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாகத்தினர் புகார் அளித்ததையடுத்து, சங்கர் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
13-Oct-2025