உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மேலாளர், நேரக்காப்பாளர் ஒருவரை ஒருவர் தாக்குதல்

மேலாளர், நேரக்காப்பாளர் ஒருவரை ஒருவர் தாக்குதல்

அடையாறு, அடையாறு பணிமனையில் மேலாளர், நேரக்காப்பாளர் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை மாநகர போக்குவரத்து கழக அடையாறு பணிமனையில் அன்பரசு, 40, மேலாளராக உள்ளார். நேர காப்பாளராக கோபிநாத், 50 என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மேலாளர் அன்பரசு, பணி ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. நேற்று காலை, அன்பரசிடம், கோபிநாத் எனக்கு ஏன் பணி ஒதுக்கவில்லை என, கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கோபிநாத், அன்பரசின் முகத்தில் கையால் தாக்கினார். பதிலுக்கு அன்பரசும் தாக்கியுள்ளார். காயமடைந்த இருவரும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவது புகார்படி சாஸ்திரி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை