உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இருளில் மூழ்கிய மணலி விரைவு சாலை

இருளில் மூழ்கிய மணலி விரைவு சாலை

திருவொற்றியூர் மேற்கு, முருகப்பா நகர் துவங்கி, மணலி - எம்.எப்.எல்., சந்திப்பு வரையிலான, மணலி விரைவு சாலையை, தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன.சென்னை துறைமுகம் நோக்கி செல்லும், கன்டெய்னர் மற்றும் கனரக வாகனங்களுக்கும் இச்சாலை பிரதானம்.இந்நிலையில், மணலி விரைவு சாலையின், 7 கி.மீ., துாரத்தில், 200க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், பாதிக்கும் மேல் ஒளிர்வதில்லை.காரணம், முறையான பராமரிப்பில்லை. இதன் காரணமாக இரவு நேரங்களில், முன் செல்லும் கனரக வாகனங்கள் தெரியாமல் பைக், ஸ்கூட்டர் மற்றும் இலகுரக வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.எனவே, தெருவிளக்குகளை பராமரிக்கும், மாநகராட்சி - மின்பிரிவு அதிகாரிகள், உடனடியாக கவனித்து தீர்வு காண வேண்டும்.- கே.விஜய், 34, மணலிபுதுநகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ