உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டீக்கு காசு கேட்ட வரின் மண்டை உடைப்பு

டீக்கு காசு கேட்ட வரின் மண்டை உடைப்பு

புளியந்தோப்பு, புளியந்தோப்பு, கனகராய தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ், 20. இவர், அம்பேத்கர் கல்லுாரி சாலை அருகே எம்.ஆர்., கபே டீ ஸ்டாலில் வேலை பார்த்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, கடைக்கு காரில் வந்த மூவர், டீ மற்றும் பிஸ்கட் சாப்பிட்டு விட்டு, பணம் தராமல் காரில் ஏறி செல்ல முயன்றனர். அவர்களிடம் பணம் கேட்ட நிலையில், காரில் இருந்து இறங்கி வந்த மூவரும், யுவராஜை கடையில் இருந்த பிஸ்கட் பாட்டிலாலேயே தாக்கினர். மேலும் கடையில் இருந்த பிஸ்கட் பாட்டில்களையும் உடைத்து சென்றனர். இதில், யுவராஜ் படுகாயமடைந்தார்.புளியந்தோப்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யுவராஜுக்கு தலையில் எட்டு தையல் போடப்பட்டது. அவர் அளித்த புகாரின்படி, காரில் வந்த மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை