உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெரினா மாற்றுத்திறனாளிகள் நடைபாதை தொழில்நுட்ப உதவியுடன் மாற்ற முடிவு

மெரினா மாற்றுத்திறனாளிகள் நடைபாதை தொழில்நுட்ப உதவியுடன் மாற்ற முடிவு

சென்னை, 'மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை வளாகம், தொழில்நுட்ப உதவியுடன் முற்றிலும் மாற்றப்படும்' என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.சென்னை, மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத்திறனாளிகளும் ரசிப்பதற்காக, 1.14 கோடி ரூபாயில், 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலத்துடன், மணற்பரப்பில் இருந்து, 1 மீட்டர் உயரமும் கொண்ட மரப்பாதை வளாகம் கட்டப்பட்டது. இவை, 2022 நவம்பர் முதல் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. சக்கர நாற்காலியை பயன்படுத்துவோர், நடைபாதை வழியாக சிரமமின்றி சென்று வந்தனர்.தற்போது முழுமையாக சேதமடைந்து, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.சேதமடைந்த நடைபாதையை, மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் நேற்று ஆய்வு செய்தார். கடற்கரையில் அமைக்கப்படும் நீலக்கொடி சான்றிதழ் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.பின், துணை மேயர் மகேஷ்குமார் கூறியதாவது:மாற்றுத்திறனாளிகள் நடைபாதையை ஸ்டீல், கான்கிரீட் போன்ற நிரந்தர கட்டுமானங்களை பயன்படுத்தி அமைக்க முடியாது; மரப்பலகைகளால் மட்டுமே அமைக்க வேண்டும். சேதமடைந்த நடைபாதையை முற்றிலும் அகற்றிவிட்டு, உப்பு காற்று, மழைநீர், கடல் நீர் போன்றவற்றால் பாதிக்கப்படாத வகையில், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நடைப்பாதை அமைக்கப்படும். இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி