மக்கள் நலப்பணி தொடரட்டும்
மாதவரம், மாதவரம் குடியிருப்போர் மற்றும் மாநில குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் டி.நீலகண்ணன் அறிக்கை:சென்னை மக்களின் தாகம் தீர, நகரின் முக்கிய சாலைகளில் பல இடங்களில் தானியங்கி குடிநீர் மையங்களை நிறுவி, மிகச் சிறப்பான சமூகப் பொறுப்புணர்வுக்குரிய திட்டத்தை அமல்படுத்திய முதல்வர் ஸ்டாலினுக்கு, மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.தண்ணீர் என்பது வாழ்வின் அடிப்படை, அதை எளிதில் மக்கள் அணுகும் வகையில் மேற்கொண்ட இந்த திட்டம், நகர வாழ்வில் ஒரு முக்கியமான சமூகநல முயற்சியாகும்.அதேபோல 10 மற்றும் 20 ரூபாய் என கடைகளில், பாட்டில்களில் விற்கப்படும் குடிநீர் எந்த அளவுக்கு சுத்தமானது சுதாதாரமானது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.இந்த நிலையில், முதல்வர் திறந்து வைத்த தானியங்கி குடிநீர் மையங்களிலில் மாணவ - மாணவியர், ஆட்டோ ஓட்டுநர்கள், அரசு பேருந்து ஊழியர்கள், நடத்துநர்கள், பொதுமக்கள் என பலரும், குடிநீர் பயன்படுத்துவதை காண முடிகிறது.இச்சிறந்த திட்டம் எவ்வித தொய்வில்லாமல் பார்த்து கொள்வது, அந்தந்த மண்டல அதிகாரிகள், குடிநீர் வாரிய அதிகாரிகளின் கடமையாகும்.இவ்வாறு அவர் கூறினார்.