துாய்மை பணியாளருக்கு மேயர் பரிசு
சென்னை தங்கசங்கலியை போலீசில் ஒப்படைத்த துாய்மை பணியாளரை, மேயர் பிரியா பாராட்டி கவுரவித்தார். அடையாறு மண்டலம் இ.சி.ஆர்., பிரதான சாலையில், மருதீஸ்வரர் கோவில் எதிரே, துாய்மை பணியின் போது, தங்கச் சங்கலியை துாய்மை பணியாளர் கிளாரா கண்டெடுத்தார். உடனடியாக நகையை திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து, கிளாராவின் நேர்மையை, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி பாராட்டினர். இந்நிலையில், துாய்மை பணியாளர் கிளாராவை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு அழைத்து, சால்வை அணிவித்து, 10,000 ரூபாய் பரிசு கொடுத்து மேயர் பிரியா பாராட்டினார். இந்நிகழ்வில், மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், இணை கமிஷனர் ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.