உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குதிரையேற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம்

குதிரையேற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம்

சென்னை, துப்பேட்டை, குதிரைப்படை வளாகத்தில் புதிதாக திறக்கப்பட்ட பயிற்சி பள்ளியில், கடந்த 20ம் தேதி குதிரையேற்றப் போட்டியை விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார். போட்டியின் இறுதி நாளான நேற்று, ஏழு அணிகளுக்கு, ஐந்து பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.பரபரப்பாக நடந்த போட்டியில், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் கோப்பையை 'சென்னை இக்யூடேஷன் சென்டர்' அணி வென்றது. மேலும் சிறந்த குதிரையேற்ற வீரருக்கான கோப்பையை இஸபெல் வென்றார்.சிறந்த குதிரையேற்ற வீரருக்கான யூத் கோப்பையை மிராயா தாதாபாய் வென்றார்.வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக காவல் துறை டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பதக்கங்களையும், கோப்பைகளையும் வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை