மேலும் செய்திகள்
லஞ்சம் வாங்க தனியறை... 'வெளங்குமா' கனிமவளத்துறை!
26-Nov-2024
எம்.ஜி.ஆர்.நகர், ஜாபர்கான்பேட்டை, வாசுதேவன் நகரைச் சேர்ந்தவர் ரேகா, 37. இவர், எம்.பி.பி.எஸ்., முடித்து, மெட்ராஸ் மருத்துவ கல்லுாரியில் மருத்துவ முதுகலை பட்டம் படித்து வருகிறார்.இவருக்கு, கடந்த மாதம் 30ம் தேதி எஸ்.பி.ஐ., வங்கி 'நெட் பேங்கிங் ரிவார்டு பாயின்ட்' முடிவடைய போவதாக 'லிங்க்' வந்துள்ளது. அந்த லிங்க்கை 'கிளிக்' செய்து, ஓ.டி.பி., அளித்த நிலையில், அவரது வங்கி கணக்கில் இருந்து, 49,000 ரூபாய் எடுக்கப்பட்டது. அதேபோல, எம்.ஜி.ஆர்.நகர் கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் ராமசந்திரன், 27; தனியார் நிறுவன அதிகாரி. இவர் பயன்படுத்தி வரும் கிரெடிட் கார்டின் 'ரிவார்டு பாயின்ட்' முடிவடைய போவதாக, கடந்த மாதம் 27ம் தேதி குறுந்தகவல் வந்தது. அந்த 'லிங்க்'கை 'கிளிக்' செய்த ராமசந்திரன், ஓ.டி.பி.,யும் பதிவு செய்தார். இதையடுத்து, அவரது வங்கி கணக்கில் இருந்து 60,000 ரூபாய் எடுக்கப்பட்டது.இருசம்பவங்கள் குறித்து எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
26-Nov-2024