உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஹோட்டல் மாடியில் இருந்து விழுந்த மேகாலயா நபர் பலி

ஹோட்டல் மாடியில் இருந்து விழுந்த மேகாலயா நபர் பலி

பம்மல்,:பம்மலில், தனியார் ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து, போதையில் தவறி விழுந்த மேகாலயா வாலிபர், பரிதாபமாக உயிரிழந்தார். மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்தவர் ரோஹில் சங்மா, 24. பல்லாவரம் அடுத்த பம்மல், முத்தமிழ் நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, ஹோட்டலின் மூன்றாவது மாடியில், போதையில் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்த ரோஹில் சங்மா, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை, சக ஊழியர்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை