உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அடையாறு உடைந்த பாலம் அருகே பூங்கா அமைக்க மெட்ரோ முடிவு

அடையாறு உடைந்த பாலம் அருகே பூங்கா அமைக்க மெட்ரோ முடிவு

சென்னை, அடையாறு உடைந்த பாலம் பகுதியில் பூங்கா அமைக்க, மெட்ரோ ரயில் நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது.சென்னை சாந்தோம் கடற்கரைக்கும், பெசன்ட் நகர் கடற்கரைக்கும் இடையே, அடையாறு கடலில் கலக்கும் பகுதி உள்ளது. இந்தப் பகுதியை மக்கள் கடக்க, 1967ம் ஆண்டு ஒரு பாலம் கட்டப்பட்டது. அந்த காலகட்டத்தில் மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியாக இந்தப் பாலம் திகழ்ந்தது. ஆனால், 1977ம் ஆண்டு அடித்த பெரும் புயலில் இந்தப் பாலம் உடைந்து போனது.இந்த பாலத்தை மீண்டும் சீரமைக்கவில்லை. அதன்பின், சுற்றுத்தலமாக மாறியது. சென்னையில் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக, அடையாறு உடைந்த பாலம் உள்ளது.தற்போது, இந்த பாலத்தை ஒட்டியுள்ள பகுதிகளை மேம்படுத்தி, பூங்கா அமைக்கப்பட உள்ளது.இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:அடையாறு உடைந்த பாலம், மேம்பால ரயில் நிலையம், இந்திரா நகர் பகுதி போன்ற இடங்களில் பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளோம்.இதற்கான, சாத்திய கூறு ஆய்வு மேற்கொள்ள டெண்டர் வெளியிட்டு, தனியார் நிறுவனம் தேர்வு செய்ய உள்ளோம். பூங்கா அமைப்பதற்கான சாத்திய கூறுகள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன்பின், தமிழக அரசின் ஒப்புதல் பெற்று, பூங்கா அமைக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ