உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெட்ரோ மேம்பால பணி இறுதி கட்டம் ஓ.எம்.ஆரில் சாலை விரிவாக்கம் வேகம்

மெட்ரோ மேம்பால பணி இறுதி கட்டம் ஓ.எம்.ஆரில் சாலை விரிவாக்கம் வேகம்

சென்னை,மாதவரம் - சிறுசேரி தடத்தில், ஓ.எம்.ஆரில் நடக்கும் மெட்ரோ மேம்பால இணைப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இதனால், துரைப்பாக்கம் முதல் எஸ்.ஆர்.பி., டூல்ஸ் வரை தடுப்புகள் அகற்றப்பட்டு, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 63,246 கோடி ரூபாய் மதிப்பில், மூன்று வழித்தடங்களில், 119 கி.மீ., துாரத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மாதவரம் - சிறுசேரி வழித்தடத்தில், மாதவரம் முதல் தரமணி வரையில் சுரங்கப்பாதை வழியாகவும், அதன்பின் சிறுசேரி வரை மேம்பால பாதையிலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளன.இதற்காக, இந்த தடத்தில் உள்ள சாலைகளில் தடுப்புகள் அமைத்து, ராட்சத இயந்திரங்களை நிறுவி, இரவு, பகலாக பணிகள் நடந்து வருகின்றன. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஓ.எம்.ஆர்., சாலையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட துாண்களில், மேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. மேம்பாலம் இணைப்பு பணிகள் முடிந்துள்ள, துரைப்பாக்கம் முதல் எஸ்.ஆர்.பி., டூல்ஸ் பகுதி வரை, ஓரளவுக்கு போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.சாலை விரிவாக்கம் மும்முரம்இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் நடந்து வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளில், மேம்பாலம் பாதை பணிகள் தாமதமின்றி நடக்கின்றன. மாதவரம் - சிறுசேரி தடத்தில், ஓ.எம்.ஆர்., பகுதிகளில் மேம்பால இணைப்பு பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனால், காரப்பாக்கம், மேட்டுக்குப்பம், துரைப்பாக்கம், பெருங்குடி, கந்தன்சாவடி, எஸ்.ஆர்.பி., டூல்ஸ் பகுதிகளில், சாலை தடுப்புகளை அகற்றி, சாலைகளை விரிவாக்கம் செய்து, உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறோம். இதனால், வாகனங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி