உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  நாளை நள்ளிரவு வரை மெட்ரோ ரயில்கள் ஓடும்

 நாளை நள்ளிரவு வரை மெட்ரோ ரயில்கள் ஓடும்

சென்னை: 'ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் நடப்பதால், மெட்ரோ ரயில்கள் நாளை நள்ளிரவு 1:00 மணி வரை இயக்கப்படும்' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்கிறது. போட்டியை காண செல்லும் ரசிகர்களுக்கு, தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க, சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்துடன், மெட்ரோ ரயில் நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதையொட்டி, அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, நாளை கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு, 1:00 மணிக்கு, விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் நோக்கி புறப்படும். பயணியர் கடைசி மெட்ரோ ரயில் புறப்படுவதற்கு, 10 நிமிடங்களுக்கு முன், அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் வர வேண்டும். பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணியர், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் வழித்தடம் மாறிக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை