உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எம்.ஜி.ஆர்., ஸ்போர்ட்ஸ் கிளப் அணி டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் முதலிடம்

எம்.ஜி.ஆர்., ஸ்போர்ட்ஸ் கிளப் அணி டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் முதலிடம்

சென்னை, மார்ச் 27--சென்னை மாவட்ட டென்னிஸ் பால் கிரிக்கெட் சங்கம் சார்பில், டென்னிஸ் பால் கிரிக்கெட் சூப்பர் லீக் போட்டிகள், விருகம்பாக்கம், ஆவிச்சி பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தன.போட்டியில், 12, 14, 17, 19 ஆகிய பிரிவுகளில், மொத்தம் 24 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு போட்டியும், ஆறு ஓவர்கள் அடிப்படையில் நடந்தன.அந்த வகையில், 12 வயது பிரிவில், சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளி முதலிடத்தையும், அசோக் நகர் ஜி.ஆர்.டி., பள்ளி இரண்டாம் இடத்தையும், பல்லாவரம் சி.எஸ்.ஐ., ஸ்டீபன் அணி மூன்றாடம் இடத்தையும் பிடித்தன.அதேபோல் 14 வயதில், கோடம்பாக்கம், எம்.ஜி.ஆர்., ஸ்போர்ட்ஸ் கிளப், சூரப்பேட் வேலம்மாள், மேற்கு மாம்பலம் ஜெய்கோபால் கரோடிய ஹிந்து வித்யாலயா, முதல் மூன்று இடங்களை பிடித்தன.தவிர 17 வயதில், கே.கே., நகர் பி.எஸ்.பி.பி., பள்ளி, ஆழ்வார்திருநகர் செயின்ட் ஜான்ஸ் பள்ளி, மயிலாப்பூர் சாவித்திரி அம்மாள் பள்ளி மூன்று இடங்களை கைப்பற்றின. 19 வயதில், தானிஷ் அகமது கல்லுாரி முதலிடத்தையும், தி.நகர் எம்.சி.என்., பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.இதில், 17 வயது பிரிவில் சிறப்பான விளையாடிய 14 சிறுவர்கள், கோவை, மேட்டுபாளையத்தில் நடக்க உள்ள மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.போட்டியில் வெற்றி பெற்ற சிறந்த வீரர்களுக்கு, தமிழ்நாடு டென்னிஸ் பால் சங்கத்தின் பொதுச் செயலர் ஞானவேல் பரிசுகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை