உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆர்.கே.நகரில்தான் அதிக மின் பணி அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

ஆர்.கே.நகரில்தான் அதிக மின் பணி அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை, ''தமிழக மின்துறை வரலாற்றிலேயே, ஆர்.கே.நகர் தொகுதியில்தான் நான்கு ஆண்டுகளில் அதிக பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன,'' என, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தி.மு.க., - ஜான் எபினேசர்: ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குபேட்டையை சுற்றியுள்ள பகுதிகள், தண்டையார்பேட்டை துர்காதேவி நகர் சுற்றியுள்ள பகுதிகளில், மக்கள் பெருக்கத்தால் வெகு காலமாக மின்பற்றாக்குறை நிலவுகிறது. இங்கு, துணை மின்நிலையங்கள் அமைக்க, அமைச்சரிடம் கடிதம் வழங்கியுள்ளேன். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், துணை மின்நிலையம் அமைக்க வேண்டும்.அமைச்சர் செந்தில்பாலாஜி: தமிழக மின்துறை வரலாற்றிலேயே, ஆர்.கே.நகர் தொகுதியில்தான், நான்கு ஆண்டுகளில் அதிக பணிகளை செய்துள்ளோம். இது, எம்.எல்.ஏ.,விற்கு நன்றாக தெரியும். அந்த பகுதிக்கு நானே சென்று, எம்.எல்.ஏ.,வையும் அழைத்து சென்று, தேவையான பணிகளை முடித்து கொடுத்துள்ளேன். எம்.எல்.ஏ., சுட்டிகாட்டியுள்ள துணை மின்நிலையம் அரசின் பரிசீலனையில் உள்ளது.இவ்வாறு விவாதம் நடந்தது.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை