கோயம்பேடு பஸ் நிலையத்தில் அமைச்சர் ஆலோசனை
கோயம்பேடு: கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, இரவு நேர காப்பகம் அமைப்பது குறித்து ஆலோசித்தார். கோயம்பேடு சந்தையில் கூலி தொழில் செய்பவர்கள், பிற இடங்களில் கூலி தொழில் செய்பவர்கள் என, பலர் இரவு நேரத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் துாங்குவது வாடிக்கை. பேருந்து நிலையத்தை இலவச லாட்ஜாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், குற்றச்செயல்களும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தை நேற்று அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில், இரவு நேர காப்பகம் கட்ட முடியுமா என்ற சாத்தியகூறுகள் குறித்து அவர், சி.எம்.டி.ஏ., அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.