உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காணாமல் போன குழந்தை மீட்பு

காணாமல் போன குழந்தை மீட்பு

அமைந்தகரை:அமைந்தகரை, எம்.எம்., காலனி புது தெருவில், நேற்று முன்தினம் இரவு, 3 வயது குழந்தை தனியே சுற்றிக் கொண்டிருந்தது. அப்பகுதி மக்கள் அந்த குழந்தையை மீட்டு, அமைந்தகரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த அங்கத் யாதவ் என்பவரின் குழந்தை என்பதும், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, வழி தவறி அடுத்த தெருவிற்கு நடந்து சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து, குழந்தையை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி