மொபைல் போன் பறிப்பு: இருவர் கைது
சென்னை, சாலையில் நடந்து சென்றவரிடம், இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணிந்து வந்து, மொபைல் போனை பறித்த இரு வாலிபர்களை, போலீசார் நேற்று கைது செய்தனர்.கோட்டூர், ஏரிகரை சாலையை சேர்ந்தவர் கணேசன், 52. கடந்த, 21ம் தேதி அன்று அதிகாலை, கோட்டூர்புரம் பொன்னியம்மன் கோவில் தெரு வழியாக நடந்து சென்றார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணிந்துவந்த, இரண்டு வாலிபர்கள் மொபைல் போனை பறித்துச் சென்றனர். இதுகுறித்து, வழக்கு பதிந்த கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி, திருவான்மியூர் திருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த நிதீஷ் குமார், 18, ராகுல், 18 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.