மேலும் செய்திகள்
ரயில் மோதி இளைஞர் பலி
10-Mar-2025
ஆவடி, ஆவடி அடுத்த அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 29; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று நள்ளிரவு கதவை திறந்து வைத்து துாங்கி கொண்டிருந்தார். அப்போது, வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் ஒருவர், மொபைல் போன் திருடி செல்வதை கண்டு பிரகாஷ் கூச்சலிட்டார்.அக்கம்பக்கத்தினர் மர்ம நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து, திருமுல்லைவாயில் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சாகர் பாய், 23, என தெரிந்தது. திருவேற்காடு, சாய் வாட்டர் வாஷ் என்ற கடையில் தங்கி வேலை செய்யும் இவர், இரவு நேரங்களில் வீடுகளில் புகுந்து மொபைல் போன் திருடுவது வழக்கமாக கொண்டுள்ளார். போலீசார் அவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து ஆறு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
10-Mar-2025