உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மொபைல்போன் திருடர்கள் தப்ப முயன்றதில் படுகாயம்

மொபைல்போன் திருடர்கள் தப்ப முயன்றதில் படுகாயம்

கொடுங்கையூர், மொபைல்போன் திருட்டில் ஈடுபட்டவர்கள், போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது, மேம்பாலத்தில் இருந்து விழுந்ததில் படுகாயமடைந்தனர். சென்னை, தண்டையார்பேட்டை, சேனியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன், 44. இவர் நேற்று தண்டையார்பேட்டை, கைலாசம் தெரு வழியாக நடந்து சென்ற போது, அங்கு நின்றிருந்த மர்ம நபர்கள் குணசேகரனை வழிமறித்து, மொபைல்போனை பறித்து தப்பினர். இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட, காசிமேடு, ஜீவரத்தினம் நகரை சேர்ந்த குகன், 35, தண்டையார்பேட்டை, வ.உ.சி.நகரை சேர்ந்த வெங்கடேசன், 38 ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து மொபைல்போனை பறிமுதல் செய்தனர். கொடுங்கையூர், எழில் நகரை சேர்ந்த மணிகண்டன், 35 என்பவர், சைக்கிளில் சென்ற போது அவரை மிரட்டி மொபைல் போனை மர்ம நபர்கள், பறித்து சென்றனர். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், வியாசர்பாடி, முல்லை நகரை சேர்ந்த அமுல்ராஜ், 26, எம்.கே.பி.நகரை சேர்ந்த சந்தோஷ், 22 ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் சாலை மேம்பாலம் அருகே ஆட்டோவில் சென்ற அமுல்ராஜ், சந்தோஷ் ஆகியோரை போலீசார் பிடிக்க முயன்ற போது, தப்பி ஓடி மேம்பாலத்தில் இருந்து குதித்தனர். படுகாயமடைந்த இருவரையும் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்த பின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !