தாய் - மகன் விபத்தில் காயம்
திருவாலங்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், மோசூர் பகுதியைச் சேர்ந்த சித்ரா, 36, தன் மகன் தர்ஷன், 18, என்பவருடன் புளியங்குண்டா கிராமத்தில் இருந்து ஸ்கூட்டரில் அரக்கோணம் நோக்கி, நேற்று காலை சென்று கொண்டிருந்தார். கனகம்மாசத்திரம் கூட்டுச்சாலை அருகே, எதிரே வந்த லாரி மோதியதில், இருவரும் காயமடைந்தனர். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.