உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாமியார், மாமனாருக்கு உருட்டு கட்டை தாக்குதல்: மருமகன் கைது

மாமியார், மாமனாருக்கு உருட்டு கட்டை தாக்குதல்: மருமகன் கைது

வண்ணாரப்பேட்டை, சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் துர்கா, 27; கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ஜீவரத்தினம், 30; வழக்கறிஞர்.இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டான நிலையில், கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. பின் வாய் தகராறு முற்றி கைகலப்பானது.இதில் ஆத்திரமடைந்த ஜீவரத்தினம், துர்காவை தாக்கினார். இதுகுறித்து துர்கா, தன் தந்தை செந்தாமரைக் கண்ணன், 65; தாய் தேவசேனா, 56 ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். துர்காவை பார்க்க பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது ஜீவரத்தினம் வீட்டிற்கு வரவே இரு தரப்பினருக்கும் இடையே தகராறு முற்றியது.இதில் ஆத்திரமடைந்த ஜீவரத்தினம் கட்டையால் துர்காவின் பெற்றோரை தாக்கினார். பின் இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.இதுகுறித்து துர்கா கொடுத்த புகாரின்படி, ஜீவரத்தினம் மீதுபெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல், காயம் விளைவித்தல், மிரட்டல் போன்ற 5 பிரிவுகளின் கீழ் வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை