உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வேகத்தடையுடன் இணைந்த பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

வேகத்தடையுடன் இணைந்த பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஆவடி, ஆவடி அடுத்த பட்டாபிராம், தண்டுரை, பூந்தமல்லி பிரதான சாலை, ஜெயராம் ரெட்டி தெரு அருகே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடை பல மாதங்களாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து, விபத்தில் சிக்கி வருகின்றனர். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பள்ளத்தை சீரமைக்காமல், அவ்வப்போது கட்டட கழிவுகளை கொட்டி சமன் செய்கின்றனர். அவை சாரல் மழைக்கு காணாமல் போகின்றன. கனரக வாகனங்கள் அடிக்கடி சென்று வருவதால், வேகத்தடையில் உள்ள பள்ளம் நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது. இதன் காரணமாக தொடர் மழையில், பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதே போல், அணைகட்டுச்சேரி பள்ளத்துகோவில் அருகே உள்ள வேகத்தடையிலும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வேகத்தடையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை