உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காவல் நிலையம் அருகே விதிகளை மீறும் வாகன ஓட்டிகள்: போலீசார் அலட்சியம்

காவல் நிலையம் அருகே விதிகளை மீறும் வாகன ஓட்டிகள்: போலீசார் அலட்சியம்

ராயப்பேட்டை, தேனாம்பேட்டை மண்டலம் ராயப்பேட்டையில், கவுடியா மடம் சாலை உள்ளது. அவ்வை சண்முகம் சாலை முதல், ராயப்பேட்டை நெடுஞ்சாலையை இணைக்கும் இச்சாலை, ஒருவழியாக மாற்றப்பட்டு உள்ளது.இச்சாலையில், தனியார் பள்ளி, கோவில், ஏராளமான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதிகளுக்கு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக செல்வோர், அவ்வை சண்முகம் சாலையில் வலது புறம் திரும்பி, பின் கவுடியா மடம் சாலையில், வலது புறம் திரும்ப வேண்டும்.ஆனால், சில வாகன ஓட்டிகள் அத்துமீறி, அதுவும் ராயப்பேட்டை காவல் நிலையம் அருகேயே, ஒரு வழிப்பாதையில் எதிர்திசையில் செல்கின்றனர். இதனால், அடிக்கடி இச்சாலையில் போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும், போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்காமல், எச்சரிக்கை பலகை மட்டுமே அமைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.போக்குவரத்து போலீசாரிடம் கேட்டபோது, 'காவல் நிலையம் அருகே விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை கண்காணிப்பதற்காக, நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. 'அவற்றில் பதிவாகும் காட்சிகளை வைத்து, விதிமீறலில் ஈடுபடும் வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை