உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பணிக்கு திரும்பும் எம்.ஆர்.எப்., தொழிலாளர்கள்

பணிக்கு திரும்பும் எம்.ஆர்.எப்., தொழிலாளர்கள்

திருவொற்றியூர்:திருவொற்றியூர் அடுத்த விம்கோ நகரில், எம்.ஆர்.எப்., டயர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. மருத்துவ காப்பீட்டு முன்பணத்தொகையை, இந்தாண்டு தர மறுத்த நிர்வாகத்தை கண்டித்து, 20 நாட்களாக தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று நடந்த பேச்சில், தொழிலாளர் நலத்துறையால், இரு தரப்பினருக்கும், பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து, எம்.ஆர்.எப்., தொழிலாளர்கள் சங்கம் வெளி உப தலைவர் சிவபிரகாசம் கூறுகையில், ''தொழிலாளர்கள், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். நிர்வாகம், பயிற்சி தொழிலாளர் திட்டத்தை விடுத்து, செப்., 9ம் தேதி நிலையிலே பணி சூழல் தொடர வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கை இருக்க கூடாது என, அறிவுறுத்தல் வழங்கியது. எனவே இன்று பணிக்கு திரும்ப முடிவெடுத்துள்ளோம்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை