உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சேறும் சகதியுமான சாலை

சேறும் சகதியுமான சாலை

ஆவடி மாநகராட்சி, 17வது வார்டு, வ.உ.சி.நகர், 2வது தெருவில் 15க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலை போடப்பட்டது. அதன்பின் போதிய பராமரிப்பில்லாத காரணத்தால், குண்டும் குழியுமாக மாறி, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.மழை காலங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறுகிறது. இதனால், பகுதிவாசிகள் வாகனங்களை இயக்க முடிவதில்லை. சிறுவர் முதல் முதியோர் வரை அடிக்கடி வழுக்கி விழும் நிலைமை உள்ளது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.- சிவகுமார், வ.உ.சி.நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !