உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரவுடித்தனத்தை கைவிட அறிவுறத்திய பெயிண்டர் கொலை: மூவருக்கு ஆயுள்

ரவுடித்தனத்தை கைவிட அறிவுறத்திய பெயிண்டர் கொலை: மூவருக்கு ஆயுள்

சென்னை,சென்னை அண்ணாநகர், அன்னை சத்யாநகரைச் சேர்ந்தவர் சந்தானம், 36. ரவுடித்தனம் செய்த வந்த இவர், ஒரு கட்டத்தில் திருந்தி பெயிண்டராக வேலை செய்து வந்தார்.அதே பகுதியில் ரவுடிகளாக வலம் வந்த ராபர்ட், 21, அவரது சகோதரர் ஜோசப்,18 ஆகியோரிடம், ரவுடித்தனத்தை கைவிடும்படி, சந்தானம் அறிவுறுத்தி உள்ளார்.இதில் ஆத்திரம் அடைந்த சகோதரர்கள் இருவரும், அன்னை சத்யா நகர், 8 வது தெருவில் கடை நடத்தி வரும் தன் தாயை பார்க்க டூவீலரில் வந்த சந்தானம் மீது, மிளகாய் பொடியை துாவி, வெட்டிக்கொலை செய்தனர்.கடந்த, 2019 ஜன., 2ல் இந்த கொலை நடந்தது.இதுகுறித்து, அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிந்து, ராபர்ட், ஜோசப், சதீஷ், விமல்ராஜ் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்தனர். இதில், மூன்று பேர் சிறார் என்பதால், அவர்கள் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது. மீதமுள்ளவர்கள் மீதான வழக்கு நிலுவையில் இருந்த போது, ராபர்ட் உயிரிழந்தார்.இந்த வழக்கு விசாரணை, சென்னை 19வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.ராஜ்குமார் முன் நடந்தது. போலீசார் தரப்பில், கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞர் தனசேகரன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட ஜோசப், சதீஷ், விமல்ராஜ் ஆகியோர் மீதான கொலை குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதால், மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை