உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நாவலுார், கேளம்பாக்கம் சார் பதிவாளர் எல்லை கிராமங்கள் விபரம் வெளியீடு

நாவலுார், கேளம்பாக்கம் சார் பதிவாளர் எல்லை கிராமங்கள் விபரம் வெளியீடு

சென்னை, திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகம் மூன்றாக பிரிக்கப்பட்ட நிலையில், நாவலுார், கேளம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகங்களில் இணையும் கிராமங்களின் விபரங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது. செங்கல்பட்டு மண்டலத்தில் அமைந்துள்ள திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகம், 1886ல் துவங்கப்பட்டது. பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகியவற்றில் அமைந்துள்ள, 50 கிராமங்கள் இந்த சார் பதிவாளர் அலுவலக எல்லை வரம்பாக அமைந்திருந்தன. இப்பகுதியில், சொத்துக்களின் மதிப்பு மிக அதிகம் என்பதுடன், ரியல் எஸ்டேட் நடவடிக்கைகளும் அதிகமாக உள்ன. இதனால், திருப்போரூர் சார் பதிவாளர் அலவலகம் உயர் முக்கியத்துவம் பெற்று வந்தது. இங்கு பணி புரிய வேண்டும் என்பதில் சார் பதிவாளர்கள், பணியாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், சார் பதிவாளர் அலுவலகங்களின் எல்லைகளை மறுசீரமைப்பு பணிகள் நடந்தன. இதன்படி, திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகம் மூன்றாக பிரிக்கப்பட்டு, நாவலுார், கேளம்பாக்கம் ஆகிய புதிய சார் பதிவாளர் அலுவலகங்கள் சமீபத்தில் திறக்கப்பட்டன. இந்நிலையில், கேளம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில், 20 கிராமங்களும், நாவலுார் சார் பதிவாளர் அலுவலகத்தில், ஒன்பது கிராமங்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக பதிவுத்துறை அறிவித்துள்ளது. கேளம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில், கொளத்துார், வெளிச்சை, புதுப்பாக்கம், காயார், கோவளம், கேளம்பாக்கம், திருவிடந்தை, செம்மஞ்சேரி, தையூர் ஏ, தையூர் பி, நெம்மேலி, கிருஷ்ணன் காரணை, பட்டிபுலம், சலவாயன் குப்பம் ஆகிய கிராமங்கள் இணைந்துள்ளன. நாவலுார் சார் பதிவாளர் அலுவலகத்தில், காரணை, தாழம்பூர், சிறுசேரி, படூர், நாவலுார், ஏகாடூர், கழிப்பட்டூர், முட்டுக்காடு, கானாத்துார் ரெட்டிக்குப்பம் ஆகிய கிராமங்கள் இணைந்துள்ளன. இந்த விபரங்கள், பதிவுத்துறை வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. **


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை