மேலும் செய்திகள்
சிட்டி கிரைம்
07-Nov-2024
ஓட்டேரி, யனாவரம் ஏகாங்கிபுரத்தை சேர்ந்தவர் கவிப்ரியா, 25. கணவரை பிரிந்து மூன்று மாதங்களாக தாய் வீட்டில், இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டருகே வசிக்கும் அனுசுயா, 35 என்பவரின் 14 வயது மகனை பார்க்க நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் சிலர் வந்து சென்றுள்ளனர். இதை கவிப்ரியாவிடம், வெளிநபர்கள் அடிக்கடி வருவதாக அனுசுயாவிடம் முறையிட்டுள்ளார்.இதுதொடர்பாக இருதரப்பிலும் வாய்தகராறு ஏற்பட்டு, கைகலப்பானது.அப்போது கட்டையால் கவிப்ரியாவை அனுசுயா தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த கவிப்ரியா மண்டை உடைந்தது. அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கவிப்ரியா அளித்த புகாரின்படி, அனுசுயாவை நேற்று ஓட்டேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
07-Nov-2024