உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சங்கர் நகர் காவல் நிலையத்தில் புதிதாக நுாலகம் திறப்பு

சங்கர் நகர் காவல் நிலையத்தில் புதிதாக நுாலகம் திறப்பு

பம்மல்:பம்மலில், சங்கர் நகர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, அனைத்து மகளிர் உள்ளிட்ட பிரிவுகளில், 40க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றுகின்றனர்.திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கும் குற்றவாளிகள், விசாரணைக்காக இக்காவல் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.காவல் நிலையத்திற்கு வரும் மக்கள், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அதுபோன்ற நேரங்களில், அவர்களின் நேரம் வீணாகிறது.அதனால், பொதுமக்கள் மட்டுமின்றி, காவலர்களும் தங்களது நேரத்தை பயனுள்ளதாக மாற்றும் வகையில், காவல் நிலையத்தில் நுாலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சி, 29வது வார்டு கவுன்சிலர் சண்முகசுந்தரி, தனது சொந்த செலவில், இந்த நுாலகத்தை அமைத்து கொடுத்துள்ளார்.இதுமட்டுமின்றி, அன்றாட நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளும் வகையில், முன்னணி நாளிதழ்களும் வைக்கப்பட்டுள்ளன.இதன் வாயிலாக, காவல் நிலையத்திற்கு வருவோர், தங்களது நேரத்தை வீணாக்காமல், புத்தகங்களை படித்து, அறிவை பயனுள்ள வகையில் வளர்த்துக் கொள்ள முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !