உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காவேரியில் புதிய மருத்துவ பிரிவு துவக்கம்

காவேரியில் புதிய மருத்துவ பிரிவு துவக்கம்

சென்னை :வடபழனி காவேரி மருத்துவமனையில், நுரையீரல் உயர் ரத்த அழுத்த சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை தலைவர் அன்பரசு மோகன்ராஜ் கூறியதாவது:காவேரி மருத்துவமனை, இதயம் சார்ந்த நுரையீரல் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிப்பதில், அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி வருகிறது. அதன்படி, நுரையீரல் தொடர்பான உயர் ரத்த அழுத்த பிரச்னைக்கு பிரத்யேக மருத்துவ மையம், இதயவியல் துறையின் கீழ் துவங்கப்பட்டு உள்ளது.இங்கு நுரையீரல் சார் உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு முறையான மருத்துவம், அறுவை சிகிச்சை, பரிசோதனை, உடல்நிலை கண்காணித்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். ரத்த அடைப்புகள், நுரையீரலுக்கு செல்லும் தமனிகளை பாதிக்கும். இவற்றால் நுரையீரல் மீதான அழுத்தம் அதிகரித்து, இதயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இம்மையத்தால், இதுபோன்ற பாதிப்புகளை குணப்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை