உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெரினா கலங்கரை விளக்கத்தில் புதிய ரேடார் கருவி பொருத்தம்

மெரினா கலங்கரை விளக்கத்தில் புதிய ரேடார் கருவி பொருத்தம்

சென்னை சென்னை மெரினா கடற்கரை, கலங்கரை விளக்கத்தின் 11வது மாடியில் ரேடார் கருவி பொருத்தப்பட்டு உள்ளது.இதன் வாயிலாக, சென்னைக்கு வந்து செல்லும் கப்பல்கள், மீன்பிடி படகுகள் உள்ளிட்டவற்றை, 100 முதல் 150 கி.மீ., துாரம் வரை கண்காணிக்க முடியும். ரேடார் கருவி எடுக்கும் ஸ்கேன் விபரங்கள் மற்றும் புகைப்படங்களை, கலங்கரை விளக்க அதிகாரிகள், உடனுக்குடன் கடலோர காவல்படைக்கு அனுப்புகின்றனர். கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவதை தடுக்க, இவ்வாறு நடக்கிறது.இந்த ரேடார் கருவி, சமீபத்தில் பழுதடைந்தது. இந்நிலையில், பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்பட்ட புதிய ரேடாரை, 60 மீட்டர் கிரேன் உதவியுடன், தொழில்நுட்ப நிபுணர்கள், நேற்று பொருத்தினர்.இந்த புதிய ரேடார் கண்காணிப்பு துாரம் போன்ற விபரங்களை, கடலோர காவல்படை அதிகாரிகள் அறிவிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ