சீரமைத்த சாலையில் சேதம் புகாரால் புதிதாக அமைப்பு
சென்னை; தேனாம்பேட்டை மண்டலம், ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை மேம்பாலத்தின் அணுகு சாலை, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் சிதிலமடைந்து காணப்பட்டது. இதையடுத்து, அணுகு சாலையில் 'மில்லிங்' செய்யப்பட்டு, 50 மீட்டர் நீளத்திற்கு புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. நான்கு நாட்களுக்கு முன் அமைத்த சாலையில், அடுத்த நாளே கற்கள் பெயர்ந்து, அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழும் அபாயம் ஏற்பட்டது . தரமில்லாமல் சாலை அமைத்ததாக, அப்பகுதிமக்கள் குற்றஞ்சாட்டினர். இதுகுறித்து நம் நாளிதழில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, அணுகு சாலையில் தரமின்றி அமைக்கப்பட்ட சாலையை அடியோடு பெயர்த்தெடுத்து, இரு நாட்களுக்கு முன், புதிதாக சாலை போடப்பட்டுள்ளது.