உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதைப்பொருள் வழக்கில் நைஜீரிய வாலிபர் கைது

போதைப்பொருள் வழக்கில் நைஜீரிய வாலிபர் கைது

சென்னை, அசோக்நகர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், கடந்த, 1ம் தேதி, அசோக்நகர் ஆறாவது அவென்யூவில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, கொக்கைன், மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த, நெசப்பாக்கத்தைச் சேர்ந்த செல்வராஜ், 26 உட்பட, ஐந்து பேரை கைது செய்தனர்.அவரிடம் இருந்து, 46.7 கிராம் கொக்கைன், 6.88 கிராம் மெத் ஆம்பெட்டமைன், ஐந்து மொபைல்போன் பறிமுதல் செய்யப்பட்டன.கைதானவர்கள் கொடுத்த தகவலையடுத்து, திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி, 25, நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஆண்டனி ஓக்போ ஒகோரோ, 32 ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து, 12.42 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ