உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வட சென்னை 600 மெகா வாட் 50 நாளாக உற்பத்தி முடக்கம்

வட சென்னை 600 மெகா வாட் 50 நாளாக உற்பத்தி முடக்கம்

சென்னை,திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில், வடசென்னை விரிவாக்க அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு, தலா 600 மெகா வாட் திறன் உடைய, இரு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த மின்சாரம், சென்னை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களின் மின் தேவையை பூர்த்தி செய்கிறது.வடசென்னை விரிவாக்க மின் நிலையத்தின் முதல் அலகில், 'டர்பைன்' பழுது காரணமாக, இந்தாண்டு மார்ச் 1ம் தேதி பகல் 11:14 மணிக்கு, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.பழுது சரிசெய்யப்படாமல், கடந்த 54 நாட்களாக, முதல் அலகில் மின் உற்பத்தி முடங்கியுள்ளது.கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வடசென்னை விரிவாக்கத்தில், 600 மெகா வாட் மின்சாரம் கிடைக்காததால், தனியாரிடம் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்த செலவை தவிர்க்க, முதல் அலகில் பழுதை விரைந்து சரி செய்து, மீண்டும் மின் உற்பத்தியை துவக்க நடவடிக்கை எடுக்குமாறு, மின் வாரியத்திற்கு பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி